உன்நினைவில் நான்

ஏனோ உன்னை கண்டதாலே
புதுவித மாற்றம் தானோ
அது உன்னாலே
நிகழ்ந்தது தானோ

நீயின்றி நானில்லையடி
கொஞ்சம் பேசடி கண்ணே
உன் மௌணம் கொல்லுதடி
கொஞ்சம் பாரடி பெண்ணே

உன் அன்பு மட்டும் போதுமடி
அதில் நித்தம் வாழ்வேன் நானடி
ஒரு புன்னகை செய்யடி பெண்ணே
என் பித்தம் தீருமடி கண்ணே

நினைவுகள் கொல்லுதடி
உன்மடி தேடச் சொல்லுதடி
கனவிலும் உன்முகம் எந்தன்
உறக்கமும் கெடச்செய்யுதடி..

இது உன்னால் நிகழ்ந்தது தானோ
எந்நிலை உணர்ந்திடு பெண்ணே
என்நிலை மாற்றிடு கண்ணே.....

எழுதியவர் : சே.இனியன் (8-Nov-17, 5:42 pm)
பார்வை : 666
மேலே