மேகத்தில் கரைந்த நிலா
மேகத்தில் கரைந்த நிலா :
யோகத்தில் கிடைத்த அந்த
சக்கர வாகப்பறவையின் கொள்கையை உடையாள்
விலக்கியெனை வைத்திட்டு
மேகத்தில் கரைந்த நிலா
ஆண்மையில் நம்பிக்கை
கொள்ளாமை மாபெரும்
தியாகத்தை செய்ததாய்
எண்ணிக் கொண்டு விட்டு
மேகத்தில் கரைந்த நிலா
சோகத்தில் என்னையும் ஆழ்த்திவிட்டு லோகத்தின்
மேல் வெறுப்பு கொண்டு
தனிமையே இனிமையென
மேகத்தில் கரைந்த நிலா
நினைவெனும் அனையாத
தீக்குண்டத்தில் தீவைத்து
தனிமையில் வாடு மெனை
பித்தனாக்கி வைத்து விட்டு
மேகத்தில் கரைந்த நிலா
இருந்ததன்று இதே நிலா
பிரிந்ததின்று அதேநிலா
அமைதியைத் தேடித்தேடி
மேகத்தில் கரைந்த நிலா
மறுபடி வந்து இருப்பாளோ
இதய கதவை திறப்பாளோ
காதல் தேரில் சிறப்பாளோ
மேகத்தில் கரைந்த நிலா
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
