உறைந்த யாரோ வினாடிகள்

திடுக்கென
வந்து அமர்ந்தன
நான்கு திசைகள்
சத்தமில்லாமல்
கலைந்து ஓடியது
அமைதி ..

தடங்களை
மறக்கநேர்ந்தது
திசைகள்

களைப்பாகி
கடந்து போனது
காலம்

ஆடுபரியாய்
அரங்கேறியது
அவை

ஆர்கலியாய்
ஆர்ப்பரித்தது
முடுக்கம்

பிறழ்மை
ஈன்றது
திசைகள்

ஈன்றத்தில்
உறைந்தது
யாரோ நொடிகள்....

விபத்தாய்
அதிர்ந்தது
அமைதி

முற்றத்தில்
ஒளிந்துகொண்டன
திசைகள் ........

எழுதியவர் : சன்மது (9-Nov-17, 12:41 pm)
பார்வை : 54

மேலே