மழைக்கால காதலி

மாலை பொழுதின் வேளையிலே...
மண் வாசனை கிளம்பும் போதினிலே..
மாரிவரும் எனக்காத்திருந்தேன்..
மோட்டுமலராக பூக்கக்கண்டேன்
முகிலை கிழிச்சிற்று வெள்ளிக்கம்பி
வானம் பொழிந்தது வெம்பி வெம்பி
தரை மட்டத்திலிருந்து ஒர் மின்னல் கண்டேன் ....
அது பார்வை வெளிச்சமென்று உணர்ந்தேன்....
செங்காந்த மலராய் ஈர்த்தன அவள் கண்கள்.....
அவள் சுருட்டை முடிபட்டுத் தெறித்து என்னை குத்திக்கிழித்தது தென்றல் காற்று....
கொள்ளைக் கொடுத்தனன் உள்ளத்தினை...
மாரி பொழிவதை நின்றுவிட்டான் ....
எந்தேவியை எனக்கு காட்டிவிட்டான்
யுகங்களில் யாரும் கண்டதில்லை .....
இவள் பார்வை அழகினின் தேன் சுவையை.....
தன் கலைத்திறமையை தான் காட்டிடத்தனோ...
இறைவன் இவ்வழகியை பூவுலகில் படைத்திட்டானோ...
இறைவா இவள் பிராண வெப்பம் தருவாய மழையில் நனைந்த தேகதை குளிர்காய்ந்து கொள்கிறேன் வாழ்கை முழுக்க......
அன்புடன்
விக்னேஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (9-Nov-17, 3:16 pm)
சேர்த்தது : விக்னேஷ் குமார்
Tanglish : mazhaikkala kathali
பார்வை : 77

மேலே