முதல் முதலாய்
கவிதை ஏடு
காத்திருக்குது
கயல் விழி காட்டு.
புதிதாய் நான்
பிறக்கவேண்டும்,
புன்னகை காட்டு.
தனிமையை நான்
ரசிக்கவேண்டும்,
நினைவதை சேர்த்துவிடு.
மௌனத்தை நான்
கலைத்திட வேண்டும்,
மெலிதாய் பேசு.
பகலவன் சுடுகிறான்
உன் நிழலோடு,
எனை சேர்த்திடு.
இருளில் தவிக்கிறேன்
பௌர்ணமியே,
வந்துவிடு.
பூக்கள் எல்லாம்
தவித்திருக்கு ,
பூச்சுடவா
கடற்கரை காற்று
காத்திருக்கு,
கைகோர்க்கவா.