காதல்

கடற்கரை காற்று தரும் சுகம்
தொட்டு தாலாட்டும் தென்றல் தரும் சுகம்
மல்லிகைப்பூ வாசம் தரும் சுகம்
வேய்ங்குழல் கீதம் தரும் சுகம்
கூவும் குயிலின் கீதம் தரும் சுகம்
பச்சைக்கிளி பாட்டில் சுகம்
தோகை மயில் ஆட்டத்தில் சுகம்
நதியின் ஓட்டத்தில் சுகம்
நீர்வீழ்ச்சி சலசலப்பில் சுகம்

இது அத்தனையும் தாண்டி
பெண்ணே, இன்று நீ என்னை
'காதலிக்கிறேன்' என்று சொன்னபோது
அந்த சொல்லில் நான் கண்ட சுகம்
அதை எப்படிசொல்வேனடி,அது
சொல்லில் அடங்கா சுகங்கள்
அத்தனையும் தன்னுள் அடக்கிய சுகம்
என் மனம் மட்டும் அறியும் சுகம்
காதல் தரும் அந்த சுகம்
காதல் சுகமே சுகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-17, 4:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே