இனி எல்லாம் இனியவள்

இனி
அவள்
இனியவள்.
விழியால்
புது மொழி
கற்பிக்கிறாள்.
விற்பனைக்கு இல்லா
விழி பேசியை
எனக்கு
அர்பணிக்கிறாள்.
சிவந்த இதழ்
புன்னகையில்
கவிதை கோக்கிறாள்.
பாவாடை தாவணியில்
பட்டாம் பூச்சியாய்
பறக்கிறாள்.
கை அசைத்து
புது நாட்டிய சைகை
காட்டுகிறாள்.
வாடிவாசல் காளை நான்
அவள் விழி வாசலில்.
விழுந்து விட்டேன்.
இனியவன் நான்,
இனி அவள்தான்
என்று ஆகிவிட்டேன்.