காதல் பார்வை நேரத்தில்
நொடிக்கு இருமுறை
சிரித்து முறைப்பாள்
நிகழ்காலங்களையெல்லாம்
கனவாக்கி விதைப்பாள்
மௌனங்களை விருந்தாக்கி
மணிக்கணக்கில் புசிப்பாள்
புன்னகை செய்வேன்
புருவமுயர்த்தி என்ன என்பாள்
என்னின் வினோதம் அவள்
எனக்கான விடைகள் அவள்