ஈசனே

இவன் யாரென்றேன்
சிவன் நான் என்றான்
பிழையாய் நின்றேன்
விழியால் வென்றான்

அஞ்ஞான உலகில்
அடைப்பட்டிருகிறேன்
உன் மெஞ்ஞான உலகம்
அடையவிடுவாயா

நெற்றிக்கண்ணும் தாண்டவமும்
நின்றெதிரே காணவேண்டும்
அர்த்தமுள்ள கோபங்களை
சுட்டெரிக்கும் வித்தை கற்கவேண்டும்

அந்திமக்காலங்கள்
ஆரம்பமாகிவிட - உன்
ஆசிகளில் நனைந்திட
ஆர்ப்பரிக்கிறது மனம்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 10:02 pm)
பார்வை : 324

மேலே