ஞாயமான ஆசை - Fiction

ஞாயமான ஆசை (Fiction)
======================

அபரா

உன் காது முடிகள் மேல் கோபம் வருகிறது,
அவை உன் செவிமடலை
மறைக்கிறன்றன,
தழுவுகின்றன,
அவை என் மீசையை விட
மென்மையாய் இருக்கின்றன,

உணர்வின் விசை உணர்ந்திருக்கிறாயா

காற்றை வெறுமனே
உன்னை தாலாட்ட மற்றும் அனுமதிக்கிறேன்,
விழி உறங்கு,
நிலவொளிக்கும்
உன்னைத் தீண்ட விட்டுக் கொடுக்கப்போவதில்லை,

பாரு,
என் படுக்கையில் நான் சுவரொட்டிப் படுக்கிறேன்
செந்தணல் பாரித்த சுவரில் என் நிழல்,
என் நிழலில் நீ ,
நான் முத்தமிடுகிறேன்
நிழல் முகம் சிவக்கின்றதை
முதல் முறைப் பார்க்கிறேன் ,
ஆம்பல் பூத்து,
சங்குகள் மேவும் ஊழியொன்றிற்குமுன்னால்
உன்னால்
எனக்கு வழங்கப்படும் எல்லாமே
ஞாயமான ஆசைதான்,,
வழங்கிவிடு அனுபவிக்கிறேன்,,,

என் நிழலும் பிம்பமும் தான்
உனக்கேற்ற உவமை,
அவை மட்டும்தான்
எங்கேயும் கரைந்துவிடுவதில்லை
அற்ப நேரம்
இருட்டிற்குள் மறைவதைத் தவிர

நான் இருக்கின்றவரை
என் நிழலாய் இரு,
கைகள் பட்டுத்ததும்பும் நிசையுவந்த அலைகளில் எல்லாம்
என் விம்பமாய் இரு,
நான் சிதையேறிவிட்டால்
என்னோடு சேந்து சிதையேறிவிடு

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : Anusaran (10-Nov-17, 1:45 am)
பார்வை : 130

மேலே