மனதின் வண்ணங்கள்
எதிரில் சுவர் இருக்கும்
என்பதற்காக
எண்ணியவை யாவையும்
எழுதிவிட முடியாது...
கைகளின் கறையின்
நிறம் மாறாமல் ....!
சிலருக்கு சிவப்பாக
சிலருக்கு கருப்பாக
சிலருக்கு வெள்ளையாக
சிலரோ மனதே இல்லாமல்.....!
எனக்கும் வரைந்து விட ஆவல்
இன்னமும்
என் நிறங்களை வரையறுக்க முடியவில்லை....