நான்...
விலங்கின சாதியில் மனித இனம்...
புலன்கள் ஆறுடை தனி இனம்...
மாறிடும் இவ்வுடல் என்னுருவாகுமோ? ... இல்லை...
மாறிய உறவுகள் தாம் என் அடையாளமோ...?
நான்...
எந்த வட்டத்திலும் சிக்காத வட்டப்பூஜ்யம்...
எல்லா வட்டங்களையும் ஈர்க்கும் கதிரவ கறுமையம்...
நான்...
உடைந்து சிதறிய கண்ணாடி துகள்களில் ஓர் துகள்...
அச்சேறிய தாள்களில் ஓர் எழுத்துப்பிழை...
நான்...
அரங்கேறும் நாடகத்தில் மறைந்து நிற்கும் கதாபாத்திரம்...
நீ வாசித்து கிழித்தெறிந்த கவிதையின்
விளங்கா அர்த்தம்...
நான்...
வேனலின் வெட்பம்... குளிர்மழை தூக்கம்...
அறிதலின் நுட்பம்... ஆசையின் ஏக்கம்...
பழகிடில் நட்பு... விலகிடில் துக்கம்...
இறைவனின் அதிசய படைப்பு...
நான்... உங்களில் ஒருவன்...