அன்பே நீயும் ஒரு நல்ல நடிகை
வாழ்க்கை ஒரு
நாடகம்
அதில்
நீ நன்றாக
நடித்தாய்
அன்பே !
நீ போட்ட
வேஷத்தை கலைக்க
சிலநிமிடங்கள்
எனக்கு
அது ஆயுள் !
காதலிக்கும் பொழுது
நாயகனாய்
தோன்றிய நான்
கல்யாணத்திற்கு பிறகு
வில்லனாக மாறிவிட்டேனோ!
உனக்காக
கல்வியை பாதியிலே
நிறுத்தி ,
உறவுகளை ஓரம்
கட்டி ,
உன்னை தேடி
ஓடிவந்தேன்
அன்பே !
அன்பே உனக்காக
சோகங்களையும்
சுகமாக
தாங்கிக்கொண்டேன் ,
அன்பே
நீயே
சுகத்தையும்
சோகமாக மாற்றிக்கொண்டாய் !
ஆசைப்பட்ட
வாழ்க்கையை ,
நீ பேராசையாக
மாற்றி கொண்டாயே
அன்பே ,
அன்பை சுருக்கிக்கொண்டு
ஆசைகளை மட்டும் வளர்த்தாயே ஏன்!
பணம் வாழ்க்கையில்
ஒரு பகுதிதான் ,
அனால் நீ
பணமே
வாழ்க்கையாக மாற்றிக்கொண்டாய் !
நீ கொடுக்கும்
விஷம் கூட
எனக்கு அமிர்தம் என்றாயே,
இன்றுவரை
உனக்கு அமிர்தத்தை
தானே கொடுத்தேன் ,
ஏன் அன்பே
அதையும் உதாசினபடுத்தினாய் !
நீ ஆசையாய்
வாங்கிக்கொடுக்கும்
கந்தல் கூட
எனக்கு பட்டு மாதிரி
என்றாயே ,
இன்று
நான் பட்டே வாங்கி கொடுத்தேன்
ஆனால்
அது கூட
புடவை செல்பில்
போர்வைகளாய்!
வாழ்க்கை எனும் நாடகத்தில்
நீ நன்றாக
நடித்து காட்டினாய்
அன்பே ,
இதில் என்ன
வேடிக்கை என்றால்
நான் கட்டிய
தாலிகூட
உன் பக்கம் சேர்ந்துபோச்சே!