ஓர் ஆத்மாவின் குரல்

அன்புள்ள காலனே ,,,,,,
அன்பை பற்றி தெரியுமா உமக்கு ,,,,,
அழுகை ஓசை என்னவென்று புரியுமா உமக்கு ,,,,,
பிரிவின் வலி பற்றி தெரியுமா உமக்கு ,,,,,

உமக்கென்னய்யா தெரியும் ,,,,,,

என்னை கற்பனைக்கும் எட்டாத உலகத்திற்கு ,,,,
அழைத்து வந்து விட்டாய் நொடி பொழுதில் ,,,,,,,!

உமக்கு தெரியாத இன்னும் மண்ணில்
நான் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி ,,,,,,!

ஏதோ சாதித்து விட்டோம் எனும் மிதப்பில் இருக்காதே ,,,,,,,

கொஞ்சம் குனிந்து பாராய்யா ,,,,,,,
சந்தியில் நிற்கும் என் குடும்ப நிலையை ,,,,,!

இதுவே இனும் ஐம்பது வருடம் கழித்து ,,,,,,,
நீ இங்கு கூட்டி வந்துருந்தால் ,,,,,,
உன் பாதம் படிந்து பதித்திருப்பேன் என் நன்றியை ,,,,,,,,!

என்னை நம்பியவர்களை ஏமாற்றி விட்டு ,,,,,,
உன் உலகத்தில் எனக்கென்னய்யா வேலை ,,,,,,!

ஒன்று மட்டும் கேட்டுக் கொல் ,,,,,,,,

நீ என்னை இப்பொழுது கீழே அனுப்பவில்லை ,,,,,
எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை ,,,,,,

உனையும் மேலே அனுப்ப ,,,,,,!!!!!!

எழுதியவர் : பா.தமிழரசன் (13-Nov-17, 6:58 pm)
Tanglish : anbulla kaalane
பார்வை : 107

மேலே