என் காரிகையே
பச்சைக்குதிரை நானாட
பக்கம் வந்துவிடாதே
தாவும் எனது ஆட்டம்
தவிக்க வைத்துவிடாதே
சுற்றும் எனது பூமி
நிற்க வைத்தவள் நீயே
புதிதாய் ஓர் உலகம்
தந்தவளும் அடி நீயே
கண்ணாம்பூச்சி நீயாட
கண்கள் இழந்தவன் ஆனேன்
பல்லாங்குழி நீயாட
உன் கைவிரல் முத்தானேன்
ஆழ்கடலில் விழுந்தேன்
கரையை அடைந்துவிட்டேன்
உன் கன்னக்குழியில் விழுந்தேன்
கரையே மறந்துவிட்டேன்
காணல் நீரைக் குடித்தேன் - உன்னால்
கவிதை ஒன்றைப் படைத்தேன்
என் காரிகையே உனக்காய்
நான் காத்துக்காத்துக் கிடந்தேன்
தும்மல் வந்தால் உன் பெயரே
நான் துடிக்கும்போதும் உன் பெயரே
சொன்னால் வலியும் குறைந்துவிடும்
நீ அருகிலென்றால் வலியே மறந்துவிடும்.