ம. ரமேஷ் ஹைக்கூ - 2
![](https://eluthu.com/images/loading.gif)
• அப்பன் தொழில்
மகனுக்கு
மேற்படிப்பிற்குப் பணமில்லை
• ரோஜாத் தோட்டம்
பூக்களைப் பறிக்கவில்லை
முட்களை உடைத்தெரிந்தேன்
• போன்சாய்கள் சுமக்கும்
உலகத்தின் சுமை
மடிக்கணினி
• பேச வாய்த்திறக்கும் நேரம்
சப்தமாக ஒலிக்கும்
கோயில் மணி
• வன்முறைக்கு ஆயுதம்
வன்முறைதான்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு