தேடினேன் கிடைக்கவில்லை

இறைவனைத் தேடினேன் கிடைக்கவில்லை
நிம்மதியைத் தேடினேன் கிடைக்கவில்லை
பணத்தைத் தேடினேன் கிடைக்கவில்லை
இழந்த சொத்தைத் தேடினேன் கிடைக்கவில்லை
நல்ல நண்பனைத் தேடினேன் கிடைக்கவில்லை
வேலையைத் தேடினேன் கிடைக்கவில்லை
என் காதலியைத் தேடினேன் கிடைக்கவில்லை
ஒரு துணையைத் தேடினேன் கிடைக்கவில்லை
அறிவைத் தேடினேன் கிடைக்கவில்லை
பிறர் அன்பைத் தேடினேன் கிடைக்கவில்லை
பேரும் புகழும் தேடினேன் கிடைக்கவில்லை
அதிகாரத்தைத் தேடினேன் கிடைக்கவில்லை
அந்தஸ்தைத் தேடினேன் கிடைக்கவில்லை
இறுதியில் ஆன்மீகத்தை நாடினேன்
தேடியதுக்கு பதில் கிடைத்து விட்டது
“எதை நினைக்கிறாயோ கடைசியில்
அதுவாகவே நீ ஆகிறாய்” என்றார் விவேகானந்தர்.
"எதை நீ தேடுகிறாயோ அது உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது”
என்கிறது ரூமியின் வரிகள்.
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (15-Nov-17, 1:56 am)
பார்வை : 338

மேலே