நா நயம் மட்டுமே, நாணயமில்லை, இங்கே

சொல்லாடலில்
பதில் சொல்லி போகிறார்,
பல்லாடலில்
பாவனை செய்கிறார்,
சாமர்த்தியத்தில்
சதிராடி வாழ்கிறார்,
நாணயமில்லை அரசியலில்,
நா நயம் மட்டுமே,
நிலைக்குமா?
நெஞ்சம் கனக்கின்றதே.

எழுதியவர் : செல்வமணி (15-Nov-17, 8:21 pm)
பார்வை : 540

மேலே