பேனாவும் நானும்

என் மௌனத்தின் அந்தப்புறத்தினில்
நீயும் நானும்...
என் உளமறிந்து பேசும் உனையே
என்னகம் விரும்புகிறது...
என் கண்ணீர்களை உன் வழியே
காகிதங்களில் மையாக துடைக்கின்றாய்...
உன் மை படிந்த காகிதத்தையும் என்னோடு
பேச வைத்து மகிழ்கிறாய்..
கொஞ்சமாய் உணர்கிறேன்
நிறையவே கனிகிறேன்...
என் விரல்களுக்கு ஒத்தனமிட்டு
என்னகத்துக்கு மருந்தளிக்கும் உனை என்றும் மறவேன்...