என் மனவானில்

நேற்று
நாளையை நினைத்து
கலங்கியதில்லை
இன்று இனிமையாகவே
அளித்துள்ளான் இறைவன்...

கானல் நீரை நம்பி
தாகம் தணிக்க என்றும்
நினைத்ததில்லை
உள்ளத்தின் சோகத்தை
கன்னத்தில் காட்டியதில்லை...

வெள்ளந்தி வாழ்க்கை அதில்
இடுக்கண் வந்தாலும்
பச்சோந்தி வாழ்க்கை
வாழ்ந்ததில்லை
பிறரை வீழ்த்தி வாழ
என்றுமே நினைத்ததில்லை...

வேதங்கள் கற்றதில்லை
தாய் சொல்லே வேதம்
பேதங்கள் பார்த்ததில்லை
இறைவன் படைப்பில்
எல்லோரும் சமம்
கடவுளை நிந்தித்ததில்லை
சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக குருவாக...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Nov-17, 12:38 am)
பார்வை : 306

மேலே