இயற்கை
மாலைப்பொழுதாய்
மஞ்சள் அழகை தெளிக்கிறது
மௌனமாய் கிடக்கும் இயற்கையிலே...
வானம் பார்க்கும் மரங்களும்,
அமைதி காக்கும் மனைகளும்,
நாணத்தில் மிதக்கும் பறவைகளும்,
நதியாய் தவளும் தண்ணீரும்,
இதயத்தின் வலிகளை
இதமாக்கித்தருகிறது
இறைவனின் படைப்புக்கள்...
இருந்தும் ,
இயற்கையையும் படைத்து
அதை அழிக்கும் மனதையும்
விதைத்துவிட்டான் மானிடத்தில்..