பதில் சொல்லும் காத்திரு

நடு இரவில் உன்னை நடக்கச் சொல்வார் சிலர்
நகரும் உன்னை சிதைத்துச் செல்வார் சிலர்
நாடு மிக மோசமடி-அது
நியாயப்படுத்தி தினம் பேசுமடி

சில காதலும் பல காமமும்-தினம்
கடந்து நீ நடந்தாலும்
"பாத்து நீ நடக்கனும்மா
மானம் உனக்கு பெருசும்மா"-என

வக்கனை வழக்குகள் பல
வழிமறிக்கும்.
வாழ்க்கை பாதையில் -தினம்
உனக்கு சறுக்கம்

கலங்காதே கண்ணே -உனக்கான
காலம் வரும் பின்னே
அதுவர
ஓய்ந்திடாமல் நடக்க வேணும்
தளர்ந்திடாத திடம் வேணும்

வெடித்த அடுப்பும்
எரித்த நெருப்பும்
பதில் சொல்லும் காத்திரு...

- கோராத

எழுதியவர் : கோரா.தணிகைமணி (16-Nov-17, 4:30 pm)
பார்வை : 344

மேலே