குழந்தைள் தினம்
குழந்தைகளே
நீங்கள்
சிறகை விரித்து பறக்கும் சீட்டுக் குருவிகள்
வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்து பூச்சிகள்
துள்ளி ஓடும் மான்கள்
மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள்
சேர்ந்துண்ணும் காக்கைகள்
சிந்தனை பலம் கொண்ட எறும்புகள்
நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள்
சிற்பிக்குள் முத்துக்கள்
இசைப் பாடும் குயில்கள்
கற்பனைக்கு எட்டா அதிசயங்கள்
மழலைகளே
உங்களைப்போல் துள்ளி விளையாட ஆசை தான்
விண்ணில் பறக்க ஆசை தான்
மண்ணிலும் புரள ஆசை தான் - ஆனால்
சிறகுகளோ உடல் வலிமையோ இல்லை என்னிடம்
ஆனால் - இன்று
ஒரு நாள் மட்டும்
குழந்தையாகிறேன்
உங்களைச் சிரிக்க வைத்து என் கவலை மறக்கிறேன்
மருந்துகளை துறக்கிறேன்
மகிழ்ச்சியில் பறக்கிறேன்
தினம் தினம் இத் திருநாள் கிடைக்காதா என ஏங்குகிறேன்