விதை முளைத்துதான் ஆகவேண்டும்

நடந்துகொண்டேயிருக்கிறேன் தினம்

என் இலட்சிய பாதையின்
நீளம் குறைந்தபாடில்லை..

காணல்நீரை குடித்தால்
தாகம் எப்பபடி தீரும்

தனி விதையாய்
மண்ணின்றி இருக்க,
இப்பாறைகள்தான்
மண்துகளாகுமோ - இல்லை
மேகம் மழைவிட மறுக்கமோ - இல்லை
இடையில் மரணம் நிகழுமோ..

நிச்சயம்
எதிர்மறைக்கு வாய்ப்பில்லை - இருப்பின்
உலகம் என்றோ மடிந்திருக்கும்

காத்திருக்கிறேன்..
மலை மண்ணாகும் வரை

அதுவரை
எறும்பாய் தேய்த்துக்கொண்டிருப்பேன்;

மேகம் நீர்விட மறுப்பின்
ஊற்றுநீரை பாய்ச்சிடுவேன்;

நிச்சயம் நடக்கும்
அதுவரை காத்தருப்பேன்;

என்னால் உயிர்களுக்கு
உறைவிடம் கொடுக்கமுடியுமென்றால்;

நிழல் தரமுடியுமென்றால்;

வேர்-விழுது ஊன்றி
நெடுநாள் வாழமுடிமென்றால்;

நிச்சயம்
விதை முளைத்துதான் ஆகவேண்டும்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (17-Nov-17, 10:54 am)
பார்வை : 2075

மேலே