முதல் பார்வையில் காதல்
கண்ட உடன், மனதின் சலனம்
அது, ஒரு கண் விழியில் விழும் கிரஹணம்
அவள் கண்களை பார்த்து கவிழும்
ஒரு கவிதை மனதில் உருகும்
பேச்சை கேட்டு பேதையாகும்
பெண் உடலை கண்டு சிலிர்க்கும்
இரவில் கண்முட துயில் கொள்ளாது
பேச தூண்டும் மனது
பேச தயங்கும் உதடு
கண் ரோஜாவை தேடும்
வாய் தாஜ்மஹாலை பாடும்
வண்ண உடை உடுத்த தோன்றும்
வார்த்தை இல்லா கவிதை எழுத தோன்றும்
காதல் சொல்ல போனால்
வார்த்தை மறையும் தானாய்
உதடு நாட்டியம் ஆடும்
உள்ளம் பாட்டு பாடும்
இதுதான் பார்த்தவுடன் காதல்!.....