காதலில் விழுந்தேன்

என்ன இது???

மேனி எங்கூம்

மின்னலின் தாக்கம்...

இரத்தம் துறந்த நரம்புகள்

சோமபானத்தை சுமந்து

செல்கின்றனவோ????

மூளைக்கு ஏறுதடி போதை....

என்னவளே உன் இமைகளை


இழுத்து மூடிக் கொள்.....

என்னால் இயலவில்லை

உன் விழிவேள் வீசிய வீச்சில்

காயம் பட்டு கதறுகிறது

என் இதயம்....

என்ன உணர்விது???

குளிர்கட்டி கூடைகளை

தலையில் கொட்டியது போல.......

தேகமெங்கும் உறைந்தாலும்

தீச்சுவாலை மட்டும் எரிந்து

கொண்டே இருக்கிறதே

ஏதோ ஒரு அணுவில்

என்ன உணர்விது???

அழைத்து வாருங்கள் அந்த

ஐசக்நியூடனை அவள் விழி

ஈர்பின் அளவை அளந்தூ

சொல்லட்டூம்....

அதிகாரத்தை புரட்டி

அர்த்தங்களை சொல்லுங்களேன்...

என்ன உணர்விது??

காதலா?

இது காதலா?

இல்லை.... இல்லை....

நான் கல் இதயம் கொண்டவன்...

காதல் வயப் படமாட்டேன்.....

எனினும் ஏன் இந்த தடுமாற்றம்

திடீரென உடல்மாற்றம்.....

என்ன வேடிக்கை இது???

வேலை நிறுத்தம்

செய்தூவிட்டதோ என்

இதயம்....மூச்சு அடைத்து

மூர்சை அளிக்கிறது......

என் சாளரம் தாண்டியும்

தாராளமாய் நுழையும்

உன்விழிகள்

அத்துமீறி அட்டூழியம்

செய்கிறதே........

உளிவிழியால் உள்ளேநுழைந்து

கல் இதயத்தை செதுக்கி காதல்

சிற்பம் செய்த கன்னியே.....

"வீழ்வெனென்று நினைத்தாயோ"

என வீம்பு பிடித்து அலைந்த

பாரதியும்

வீழ்ந் துதான் போனானடி

செல்லம்மாவின் விழிச்சிறைக்குள்...

நான் மட் டும் என்ன

விதிவிலக்கா????.....

எழுதியவர் : விஜய காமராஜ் (18-Nov-17, 2:31 am)
சேர்த்தது : விமுகா
Tanglish : kathalil vizunthEn
பார்வை : 367

மேலே