அம்மாவிற்க்காக

என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
எனை நேசித்த அழகியே...!

பத்துமாதம் உனக்குள்ளே
பக்குவமாய் சுமந்தவளே...!

என் உச்சிமுதல் பாதம்வரை
உன் உயிர் ஊற்றி வளர்த்தவளே...!

என் ஆசை நிறைவேற்ற
உன் ஆசையெல்லாம் பதுக்கிவைத்தாய்
உன் உலகத்தில் ஒருபாதி
எனக்கென்றே ஒதுக்கிவைத்தாய்

பண்டிகைகள் தவறாமல்
பட்டாடை எனக்களித்தாய்
உன் புத்தாடை கனவையெல்லாம்
ஒட்டுபோட்ட சேலைக்குள்ளே
ஒளித்துவைத்தாய்

உதிரத்தை பாலாக்கி
உணவூட்டி வளர்த்த உனக்கு
ஒருவேளை சோறுகூட என்
உழைப்பால் நான் தந்ததில்லை

உன் மகன் போல் யாரென்னு
ஊரார் புகழுமாறு
சாதனைச் செயலொன்றும்
சத்தியமாய் செய்ததில்லை

இருந்தும் ஏனம்மா என்மேல்
இத்தனை பாசம்

ஒரேஒருநாள் மட்டும்
என்னை நீ மறந்துவிடு
அந்த ஒருநாள் மட்டுமாவது
உனக்கென்று வாழ்ந்துவிடு

என்றாவது ஒருநாள்
எமதர்மன் இறங்கிவந்து
இரண்டில் ஒர்உயிர்
இப்போதே வேண்டுமென்றால்
என் பதில் என்னவென்று
எனக்குத் தெரியவில்லை
ஆனால்
நிச்சயமாய் நீ சொல்வாய்
என் உயிரை எடுத்துக்கொள்
என்பிள்ளை வாழட்டும் என்று...
அதுதான் அம்மா.....

இறைவனிடம் நான்கேட்கும்
இரவல் ஒன்றுதான்

மறுஜென்மம் ஒன்றிருந்தால்
என் தாய்க்கே நான் மகனாக வேண்டும்
ஒவ்வொரு ஜென்மத்திற்க்கும்
இந்த ஒருவரம் மட்டுமே
போதும்...

எழுதியவர் : பெ.வீரா (18-Nov-17, 1:42 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 517

மேலே