கலங்காதிருங்கள்
வறுமை வாயிலிட்ட
என் வாலிபத்தை
வேகத்தை குறைத்த
என் சோகத்தை
வெறுமையை உமிழ்ந்த
என் தனிமையை
வன்முறையில் சிதைந்த
என் பெண்மையை
எம்முறையுமுமில்லாது
இதோ இம்முறை
இக்கவிக்குவியலுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்
கலைக்கண்ணோட்டத்தே
கலைத்துப் பார்ப்பவர்களே
கண்கள் கலங்காதிருங்கள்..!