வாழ்க்கையெனும் கடிகாரம்

பெரியமுள் ஓட , சிரியமுள் தொடர
பழுதில்லாமல் ஓட சரியான நேரம்
காட்டும் கடிகாரம் -வாழ்க்கையில்
பெரியமுள் கணவன், அவனோடு
இசைந்து போகும் மனைவி சிரியமுள்,
அழகாய் இசைந்தால் நல்லிசைப்போல்
அமைந்திடும் வாழ்க்கை-தடம்புரண்டாலோ
பழுதான கடிகாரம் வாழ்க்கை.





வாழ்க்கையும் அப்படித்தானே-
கணவன் மனைவி ஒத்துழைப்பில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Nov-17, 4:54 pm)
பார்வை : 132

மேலே