ஒரு தூறல் மழை போல
ஒரு தூறல் மழை போலே
என் நெஞ்சில் விழுந்தாயே
என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம்
பெண்ணே நீ போகாதே
ஏக்கத்தில் தள்ளாதே
உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே
நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய்
இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய்
சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய்
சிலநேரத்தில் அருகில் வருகின்றாய்
ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே
உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே
உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன்
என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன்
மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ
உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ