உலக ஆண்கள் தினம்

பெரும்பாலும் ஆண்களை யாரும் கவிதைகளில் வர்ணிப்பதில்லை..
காரணம் ஆண்களை
வர்ணிப்பதற்கு
வார்த்தைகளே இல்லை..

ஆண்களை பற்றி என் முதல் பதிவு
யார் இந்த ஆண்கள்...?

கவலைகளை தன்னுள் மறைத்து
போலியாக புன்னகைப்பவன்..

அன்பு காட்ட தெரியாதவனல்ல
அன்பு காட்ட நேரமில்லாதவன்..

மற்றவர்களின் சந்தோஷத்திற்காக
மாடுபோல் உழைப்பவன்..

குடும்பம் என்ற ஒரு சொல்லிற்காக
தன் காதலை தியாகம் செய்பவன்
இளமையை தியாகம் செய்பவன்
தூக்கத்தை தியாகம் செய்பவன்..

கண்ணீர் வடிக்க தெரியாத கல்நெஞ்சமுடையவனல்ல ஆண்
தன் கண்ணீர் குடும்பத்தை பாதித்துவிடும் என கண்ணீரை தன் கண் இமைக்குள் மறைப்பவன்..

குடும்பத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டுமென குளிர் வெயில் பாரமல் வெளிநாடுகளில் நிம்மதியற்று
வேலை செய்பவன்..

குடும்பத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டபடுபவன்..
எண்ணில் அடங்கா கஷ்டங்களை
நெஞ்சில் சுமப்பவன்..

வாழ்வின் இறுதி வரை
தன் குடும்பத்திற்காக மட்டுமே
வாழ்ந்து மடிபவன்..

உங்களுக்காக வாழ்க்கை என்ற போர்களத்தில் உயிர் போகும் வரை போராடும்
ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்..
ஆண்களின் உணர்வுகளையும் மதியுங்கள்..!
உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்..

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (19-Nov-17, 7:32 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : ulaga aangal thinam
பார்வை : 5682

மேலே