இமயம் கண்டேன்

உறைபனிக்குள் உடல்மறைத்து நிமிர்ந்திருக்கும் அரணாய்
***உதயகாலைப் பொழுதினிலே ஒளிர்ந்திருக்கும் பொன்னாய் !
நிறைந்திருக்கும் நீரோடை வழிநெடுகில் எங்கும்
***நெடுமரங்கள் விண்முட்ட வளர்ந்திருக்கும் எழிலாய் !
மறைத்துவிடும் உச்சிதனை முகிலினங்கள் தவழ்ந்து
***மகிழ்ச்சியுடன் உறவாடிக் கடந்துசெலும் மிதந்து !
இறையவனின் உறைவிடமாய்த் திகழ்ந்திருக்கும் இமயம்
***இயற்கைநமக் களித்திட்ட பெருங்கொடைதா னன்றோ ??

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Nov-17, 12:11 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 134

மேலே