எண்சீர் விருத்தம்

இயற்கை எழில் -- எண்சீர் விருத்தம்

தோட்டத்தில் மலர்களுமே மலர்தல் கண்டேன்
------- தோன்றியதே மனத்தினிலே இயற்கை வெள்ளம் .
பாட்டில்தான் வர்ணிக்க ஆசை கொண்டேன் .
------- பரவசமும் எனையாள மயங்கி நின்றேன் .
ஏட்டில்தான் எழுதிடவும் எழுதும் கோலை
------- எடுத்திட்டேன் கவிஞனாகி நானு மங்கே .
நாட்டம்தான் எழிலாக என்னை மாற்ற
------- நறுமணத்தைச் சுவைத்தேனே என்ற னுள்ளே !

பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Nov-17, 9:15 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 89

மேலே