கடவுள் நம்பிக்கை

ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளாக மழை பெய்யாமல் இருந்தது. ஆதனால் அங்குள்ள மக்கள் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும் அந்த கிராமத்தில் இருக்கும் மரம்,செடி கொடிகள் எல்லாம் மழை இல்லாததால் வாடி போய் இருந்தது.

அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் நாம் ஏதோ தவறு செய்து இருக்கிறோம் அதான் கடவுள் நம் கிராமத்துக்கு சாபம் அளித்துவிட்டார் என பேச ஆரம்பித்தார்கள். இந்த பேச்சு கிராமம் முழுக்க தீ போல் பரவியது.

மக்கள் இதை நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். கிராமத்து மக்கள் எல்லாரும் ஒன்று திரண்டு கோவிலுக்கு சென்று பூசாரியிடம் இதை பற்றி கூறினார்கள்.

மழை வேண்டி அடுத்த வாரம் ஒரு யாகம் நடத்தலாம் நீங்கள் எல்லாரும் அதில் பக்தியுடன் கலந்துக்கொண்டால் கண்டிப்பாக மழை பெய்யும் என்று கூறினார். மக்களும் யாகதிற்கு வந்து கலந்துக்கொள்வோம் என்றனர்.

யாகத்தை நடத்த அனைத்து வேலைகளும் விரைவாக நடந்தது. யாகம் நடத்தும் நாள் வந்தது. மக்கள் எல்லாரும் யாகத்தில் கலந்துக்கொள்ள புறப்பட்டனர். அதில் ஒரு தம்பதி அவர்களின் மூன்று வயது குழந்தையுடன் ஒரு குடை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

மக்கள் எல்லாரும் ஏன் குடை எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறீர்கள் நம் கிராமத்தில் தான் மழையே இல்லையே என்று கேட்டனர். அதற்கு அவர்கள் மழை வேண்டி தானே யாகம் நடக்க போகிறது, கடவுள் உடனே மழையை கொடுத்து விட்டால். மழையில் நனைந்தே எங்கள் குழந்தை செல்ல வேண்டியிருக்கும் அதனால் குழந்தைக்கு காய்ச்சல் வந்து விடும் என்று கூறினர்.

இதை கேட்டதும் அனைத்து மக்களும் அவர்களை சிரித்து கிண்டல் செய்தனர். தம்பி கடவுள் மழையை உடனே கொடுக்க மாட்டார். அவர் எப்பொழுது கொடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது என்று பூசாரி சிரித்துக்கொண்டே கூறினார்.

ஒரு வேளை அவர் உடனே கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்றார் அவர். அவர்கள் பேசியதை காதில் வாங்கிகொள்ளாமல் யாகத்தை தொடங்கினார்கள். யாகம் முடிந்ததும் எல்லாரும் வீட்டிற்கு சென்றுக்கொண்டு இருந்தார்கள். அதில் அந்த தம்பதி மட்டும் தங்கள் குழந்தைக்கு குடை பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

டேய் முட்டாள் இப்போது இங்கு பெய்யாது. எந்த நம்பிக்கையில் நீ குடை பிடித்துக்கொண்டு போகிறாய் என்று ஒருவர் கூறினார். அவர் கூறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது.

மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். அப்போது குடையுடன் இருந்த அவர்களை பாத்தார்கள். அவரிடம் உங்களுக்கு எப்படி மழை வரும் என்று தோன்றியது என கேட்டார்கள் அதற்கு அவர்கள் கடவுள் மழையை கொடுப்பார் என நம்பிக்கை இருந்தது அவ்வளவு தான் என்றனர். அப்போது தான் மக்களுக்கு புரிந்தது யாகத்தினால் மழை வரவில்லை இவர்கள் கடவுள் மீது வைத்த நம்பிக்கையால் தான் வந்தது என்று.

ஆம் பக்தியின் முதல் படியே நம்பிக்கை தான்.

இணையத்தில் நான்கு வரி கதையாக வந்தது.

எழுதியவர் : சரவணன் (21-Nov-17, 11:49 am)
சேர்த்தது : சரவணன்
Tanglish : kadavul nambikkai
பார்வை : 215

மேலே