சிலையாக நீ நின்றாய்

சிலையாக நீ நின்றாய்
சிவந்து நின்றது மாலை
அதிசயித்து அசையாமல் நின்றன மலர்கள்
அந்தி நிலவும் பொறாமையில் பார்த்தது
மெல்ல வீசிய தென்றலும் உன் குழலில் ஆடியது
சொல்லலாமல் நான் போனால்
என் கவிதைக்கு வாழ்வு ஏது

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-17, 6:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே