அவளுக்கென்ன அழகிய முகம்
தினமும் காலையில் டீ கடைக்கு செல்வது தான் என் வழக்கம். என் பெயர் மாதவன். பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். தினமும் காலையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் டீ கடைக்கு நண்பர்கள் உடன் செல்வேன்.
அன்றொரு நாள் கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அவ்வழியாக ஒரு பெண் நடந்து வந்துக்கொண்டு இருந்தால். அவள் தினமும் அவ்வழியாக வருபவள் தான். அவள் அருகில் ஒரு சிறிய குழந்தை தவழ்ந்துக்கொண்டு சாலையின் அருகில் போனது.
அந்த குழந்தை அழுக்காகவும், கிழிந்த ஆடையும் அணிந்துக்கொண்டு இருந்தது. அந்த குழந்தையை தூக்கி அவள் அம்மாவிடம் கொடுத்தால். அவள் அம்மா அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தால். அவளிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டு அங்கு இருந்து கிளம்பினாள். அவளின் அந்த நல்ல குணம் எனக்கு மிகவும் பிடித்தது.
மறுநாளும் அவள் வந்தால். அவளை பார்த்ததும் ஒரு மகிழ்ச்சி என்னுள் ஏற்பட்டது. தினமும் அவளை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இன்று அவளை புதிதாக பார்ப்பது போல் இருந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்கேற்ப அவளின் அகத்தின் அழகை நேற்று கண்டேன் இன்று அவளின் முகத்தின் அழகை கண்டேன். அவளின் முகம் அவ்வளவு அழகாக என் கண்களுக்கு தெரிந்தது. அன்று முழுவதும் அவள் நினைப்பாகவே இருந்தது. நாளை எப்போது வரும், அவளை மறுபடியும் காணவேண்டும் என்று துடித்தேன்.
தினமும் அவளை பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னுள் காதல் மலர்ந்தது. அவளும் நான் அவளை பார்க்கிறேன் என்பதை கவனித்து விட்டால். ஒரு நாள் என் காதலை அவளிடம் கூறினேன். எனக்கு வேலையில்லை என்பதை சுட்டிக்காட்டி மறுத்தால். அப்போது முடிவு செய்தேன் முதலில் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று.
ஒரு வருடம் கழிந்தது. நல்ல வருமானத்துடன் நல்ல வேலையும் கிடைத்தது. அவளிடம் சென்று கூறினேன். அப்போதும் என் காதலை மறுத்தால். ஏன் என்றதற்கு எங்கள் வீட்டில் என்னை பெண் பார்க்க நாளை வருகிறார்க்கள் என்றால்.
அந்நேரத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் காதலை பற்றி என் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிக்கொண்டு அவள் வீட்டிற்கு பெண் கேர்க்க செல்லலாம் என்று. யோசனை அருமையாக தான் இருக்கிறது ஆனால் இதை பற்றி என் பெற்றோரிடம் பேச தான் பயமாக இருக்கிறது.
அன்று மாலை வேலை முடித்து விட்டு வீட்டிற்க்கு வந்தேன். அம்மாவிடம் அதை பற்றி பேச சென்றேன். ஆனால் அவர்களோ எனக்கு தெரியாமல் ஒரு பெண்ணை பார்த்து வைத்து இருக்கிறார்கள். பெண் பார்க்க செல்ல தயார் ஆகும் படி என்னிடம் கூறினார்கள். எனக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
பெண் பார்க்க சென்றுக்கொண்டு இருக்கும் வழியில் என் காதலை பற்றி கூறிவிட்டேன். அதற்கு அவர்கள் இத முன்னாடியே சொல்லி இருக்கக்கூடாதா என்று திட்டினார்கள். சரி விடு இப்போது செல்லும் இடத்தில் பெண் பிடிக்கலனு சொல்லிக்கலாம் என்று கூறினார்கள்.
பெண் பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றோம். அங்கு அதற்கு மேல் அதிர்ச்சி எனக்காக காத்துக்கொண்டு இருந்தது. ஆம் அது என் காதலி. என் காதலியை தான் நான் பெண் பார்க்க வந்திருக்கிறேன். அப்போது தான் தெரிந்தது நான் அவளை பெண் பார்க்க வருவது அவளுக்கு முன்கூட்டியே தெரியும் என்பது. அதனால் தான் அவள் என்னிடம் என்னை நாளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினால் என்பது.ஆனால் அது நானாக தான் இருப்பேன் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. ஏதோ கடைசியில் என் காதல் பெற்றியடைந்தது.