இருளில் இருந்து வெளிச்சத்திற்கு

இது உங்களின் காலம்
இமைமூடும் நேரத்தில்
எழுத்தில் இல்லா இலக்கணம் எழுதப்பட்டுவிடும்

ஏமாற்றுபவன் ஏமாளி என்றால்
அதற்கும் ஒரு திறமை வேண்டும்
மிதிக்கப்பட்ட புற்கள் எழுந்து நிற்பதில்லையா?

ஏழ்மை என்பது உடமையா... ?
வீழ்வதென்பது வரமா..?
உடும்பின் சக்தி அதன் கால்களில்தான்
உறங்கும் போதும் ஒரு கண்ணை மூடாதே என்றான் வைரமுத்து

படைத்தவன் கடவுள் என்றால்
படைப்பிப்பவன் நாங்களாவோம்
கடவுளுக்கும் உருவம் கொடுத்தவன்
மனிதன் தானே...

எழுதியவர் : ஆ. ரஜீத் (22-Nov-17, 7:48 pm)
சேர்த்தது : ஆரஜீத்
பார்வை : 150

மேலே