தங்கையும் பிரிவும்

பூந்தென்றல் குழலினில் ஏற்றி, இசையாய் வடித்தாள் தங்கை...
வெண் மலர் இழையில் ஏற்றி மாலையாய் தறித்தாள் தங்கை...
வின் மலர் வானில் ஏற்றி தூது விடுத்தாள் தங்கை...

விடிந்ததும் கதிரவன் வருவான் மெல்ல, கவிதை, உனை இவன் காண மெல்ல...
இரவில் இந்திரன் வருவான் மெல்ல, என் கவிதை உன் மனதில் சொல்ல...

பால் மனம் மாறா மனமே, உன் மனம் இன்றி குடிபுக வேறெங்கு போவேன்..
பிரிந்தாள் மறைந்து போவேன், காற்றில் கரைந்து, உன் மூச்சில் வாழ்வேன்...

விதைகள் மரங்கள் ஆனது, விழுதுகள் எங்கும் பறவுது...
இனி அழுதிட வழி இல்லை..
உன் அன்பின் விதையை அழித்திட வழி இல்லை... என்றும்...

எழுதியவர் : சுதா ஜானகி (23-Nov-17, 4:31 pm)
சேர்த்தது : Sudha Janaki
பார்வை : 4160

மேலே