நட்பெனும் சிற்பத்தை...
![](https://eluthu.com/images/loading.gif)
தூர நின்று பார்க்கிறேன்
விலகிப்போக அல்ல
தூரம் துயரமாகிவிடக்கூடாது
என்ற எண்ணத்தில்...
வார்தைகளில் வழுக்குகிறேன்
மௌனமாய்ப்போக அல்ல
வார்த்தை வாதமாகிவிடும்
என்ற அச்சத்தில்...
ஆனாலும்
எழுத்துளியால்
செதுக்கினேன்
நட்பெனும் சிற்பத்தை...
விழி வரைந்த
ஓவியமாய்...
நட்பே நட்பை
உணரவேண்டுமென்பதற்க்காக...