தேடுகிறேன் நாம் காதலை

கனவினில் வந்தாய்
நினைவினில் நின்றாயடா
உறக்கம் இழந்த விழிதனில்
உன் முகமே காதலனே....
கடந்து வந்த பாதையை
நினைத்து கவி பாடுது
நெஞ்சம்....
நெகிழ்ச்சி பாதி
மகிழ்ச்சி பாதி என
நாம் கலந்து கழித்த
தருணம் இன்று
கண் முன்....
உறக்கம் இழக்கும் ஒவ்வொரு
இரவுகளிலும் உயிர் போகும் வழியை உணர்கிறேன்
உன் நினைவுகளினால்....
நெஞ்சினுள் நிறைந்து நினைவுகளில் புதைந்து
கலங்களில் கரைந்து போன
நாம் காதலை தேடுகிறேன்
அன்பே..

எழுதியவர் : navani navi (23-Nov-17, 9:28 pm)
சேர்த்தது : Gethai
பார்வை : 1717

மேலே