நான் இரசித்த அவள்

அவளது விழிகள்
கேரளத்தில் நடனமாடும் கதகளி

அவளது விரல்கள்
மத்தளத்தில் விழும் தாளம்

அவளது புன்னகை
துன்பங்களை விரட்டும் அருமருந்து

அவளது எச்சில்
மெதுவாகத் தூறும் மழைச்சாரல்

அவளது தேகம்
பிரம்மன் விளையாடிய அழகுக்கடல்

அவளது நடை
பாதம்கொண்டு ஊர்ந்துசெல்லும் நாகம்

அவளது மனம்
தகுதியானவனை அனுமதிக்கும் கடவுச்சொல் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (24-Nov-17, 7:51 am)
பார்வை : 667

மேலே