ஊடல் வினா

அன்பு கொண்ட ஆசானே
உன் அறிவைக் கண்டு வியந்தேனே!

ஆசை கொண்ட என் மனம்
உன் அருகில் வருவது தெரியவில்லையா?

பள்ளி பாடம் எடுக்கும் ஆசானே
பள்ளி அறையில் எனக்கு பாடம் எடுக்க வருவாயா?

மதிப்பெண் போடும் ஆசானே
இந்த மதி பெண்ணின் ஏக்கம் புரியவில்லையா?

பிப்பெட் உரிஞ்சும் உன் வாயால்
இந்த பெண்ணின் வாயை உரிஞ்சுவாயா?

வேதியியல் மாற்றம் அறிந்த உனக்கு
எந்தன் உடலியல் மாற்றம் தெரியவில்லையா?

ஹைட்ரஜனும்,ஆக்சிஜனும் சேர்ந்தால் நீரென்று தெரிந்த உனக்கு.
நீயும்,நானும் சேர்ந்தால் புது உயிர் வருமென்று தெரியாதா?

பல மாணவியை பார்த்த உனக்கு
உந்தன் மனைவியாக நினைக்கும் என்னை பார்க்க நேரமில்லையா?

வெப்ப உமிழ் வினை தெரிந்த உனக்கு.
உன் வெப்பத்தை என்னிடம் உமிழ தெரியவில்லையா?

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்து சேர்மங்களாய் ஆகிடுவோம் வருவாயா?

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (24-Nov-17, 7:27 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : oodal vinaa
பார்வை : 114

மேலே