ஓட்டு
ஓட்டு
========================ருத்ரா
எத்தனை தடவை தான்
இந்த ஜாடிக்குள் கல் போடுவாய்?
பாமரக்காக்கைகள்
தண்ணீர் குடித்தன?
பாவம் நீயோ
திரும்பத்திரும்ப
உன் கண்ணீரைத்தான் குடித்தாய்.
ஜனநாயம் பெரும்பான்மை தான்.
ஆனால்
அதைசிந்திப்பதோ
சிறுபான்மையிலும்
சிறுபான்மையானவர்கள் தான்.
அரிசியை ஒவ்வொன்றாய்
தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏது நேரம்
அரசியல் பற்றி அறிய?
==========================