சிறு கதைகள் எழுதுவது எப்படி

இது என் அனுபவம்

சிந்திப்பது, எழுதுவது, வாசிப்பது , பகிர்வது இரத்த அழுத்ததைக் குறைத்து. நோயினைப் போக்கும். அறிவு வளரும். மடமை மறையும். எழுத எழுத கத்தி தீட்டுவது போல் புத்தியும் கூர்மையாகும். “எனக்கு நேரமில்லை. என்னால் முடியாது “ என்று எதிர் மறையாக சொல்வது இயலாமைக்கு எடுத்துக்காட்டு. ஏன்,? எது?. எப்படி?.எங்கே? எதற்கு? போன்ற கேள்விகளை உங்கள் சிந்தனையில் மோத விடுங்கள் கதை தானாகவே மனதில் உருவாகும்
கதை எழுதுவதுக்கு வயது கட்டுப்பாடு என்று இல்லை நான் பத்து வயதில் “நாய் குட்டி விசரி” என்ற முதல் சிறுகதையும் அதன் பின் 1952 இல் கதிர்காம என் பயணத்தின் அனுபவத்தையும் ஒரு பத்திரிகைக்கு எழுதினேன். என் முதல் கதை நான் தினமும் யாழ்பாணத்து மணிக்கூட்டு கோபுரத்தின் கீழ் நான், நாய் குட்டிகளோடு கண்ட ஓரு பிச்சைக்காரி பற்றியது. கற்பனையும் கலந்து, கர்வம் கூடாது என்ற செய்தியை கதையில் சொன்னேன்
புத்தளத்தில் இருந்து கொழும்பு . காலி ஹம்பான்தொட்ட ஊடாக கதிர்காமம் ( 250 மைல்கள் ) 1952 இல் போவது ஒரு நாள் பயணம். திசமஹரகமவில் இருந்து கிழக்கே இறுதி 11 மைல்கள் யானைகள் வராமல் இருக்க ஹரோ ஹரா சொல்லி காட்டினூடாக நடந்தோம். போகும் வழியில் சுடச் சுட அப்பமும் கதலி வாழைப்பழமும் உண்டது இன்றும் என் நினவில் நிற்கிறது. ஒரு காலத்தில் பல சித்தர்கள் இருந்த கதிர்காமத்தின் தூய்மை இப்போது கெட்டு விட்டது அந்த பயணத்தை இப்போது .7 மணித்தியலத்தில் செய்யலாம்.. இப்போது கோவில் வரை காரில் போகலாம்.
வேடவ பெண்கள் பூஜையில் பங்கு கொள்ளும் மரபு இன்றும் மாறவில்லை . முருகன் வேடவர்களின் தெய்வம். வள்ளி வேடவப் பெண் மாணிக்க நதி மேலாக தொங்கு பாலமும், கோவிலுக்கு அருகே இருந்த இராமகிருஷ்ண மிசனும் இப்பொது இல்லை.
அக்காலத்தில் கல்கண்டு, ஜில் ஜில். அம்புலிமாமா, கல்கி,. குமுதம்., விகடன் வாசித்த அனுபவம் என்னை எழுதத் தூண்டியது. எனக்கு அப்போது மாதம் கிடைத்த பாக்கெட் பணம் இரண்டு ரூபாய். 1952 யில் அது பெரிய பணம். சினிமா பார்க்க கலரிக்கு 40 சதம் . ஒரு முட்டை 2 சதம். என்னை எழுத ஊக்ககுவிக்க எனக்கு என் தந்தை தந்தத பணம் இரண்டு ரூபாய் புத்தகங்களுக்கும்; பாடசலையில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தவும் செலவு செய்தேன். அதுவே என் ஆரம்பம் அந்த அனுபவத்தை வைத்து :இளம்பிறை: என்ற . கதை 2017 இல் எழுதினேன் .
விசித்திர உறவு என்ற கதை உண்மையில் நடந்தது இரு மாணவிகளுக்கு இடையே இருந்த ஒரே பால் உறவு பற்றிய உண்மைக் கதை. இதை தமிழிலும ஆங்கிலத்திலும் எழுதினேன் அக்கதை நல்ல வரவேற்பு. விந்து மாற்றத்தை கருவாக வைத்து மலடி என்ற அறிவியல் கதை எழுதினேன் உண்மை சம்பவங்ளை கருவாக வைத்து கற்பனையும் கலந்து கதை எழுதுவது இலகு ஈழத்தில் நடந்த, நடக்கும் மனித உரிமை சம்பவங்களை வைத்து பல கதைகள் எழுதினேன் அதில் எனக்கு பிடித்த கதைகள் காணி நிலம் வேண்டும், கோவில் பிரவேசம். முள் வெலிக்குப் பின்னால் . அகதிகளின் கப்பல் பயணம்
எப்போது எங்கே கதை மனதில் உதயமாகும்.? இதோ சில இடங்கள்
1. குளிக்கும் போது
2. மலம் களிக்கும் போது
3. உணவு உண்ணும் போது
4. செய்திப் பத்திரிகை வாசிக்கும் போது
5. தனிமையில் தோட்டத்தில் இருக்கும் போது
6. பயணத்தின் போது
7. பள்ளியில் படிக்கும் போது
8. அலுவலகத்தில் நடப்பதைப் பார்க்கும் போது
9. குடும்பத்தில் நடப்பதைப் பார்த்து
10. ஒரு கதை வாசிக்கும் போது மனதில் வேறு ஒரு கதை உருவாகும்
11. நண்பரோடு பேசும் போது
இப்படி பல சூழல்களில் கதை உருவாகும்
செய்திகளும். உங்கள் நினைவில் நிற்கும் சம்பவங்களும், ஊர் நம்பிக்கைகளும். சாதி வேற்றுமை, இனக் கலவரம், வரலாறு . மரபு கதைகள் , மனித உரிமை மீறல்கள், விதவை திருணம். ஒரே பால் திருமணம். பாலிய திருமணம். கிராமத்து கலாச்காரம் சீதனம், விவாகரத்து போன்ற யதார்த்தமான விடயங்கள் கதைக்கு கருவாகிறது கதை முடிவை வாசகர்கள் தீர்மானிக்க கேள்விக் குறியோடு விடலாம் அல்லது கதையை விறு விறுபாக வளர்த்து எதிர்பாராத முடிவை கொடுக்க வேண்டும்
அந்த கதை மனதில் ஆழமாக பதிந்து விட்டால் திரும்பவும் வாசகனுக்கு வாசிக்கத் தோன்றும்.
தலைப்பு சுருக்கமாகவும், கவரக் கூடியதாக இருப்பது நல்லது . வடு, தனிமை, பிரிவு, சிறை, ஊமை, உயிர் . பலி. விதி. சின்னவீடு போன்றவை பொருத்தமான தலைப்புகள் . பொருத்தமான சூழலை தெரிந்து எடுத்து மூன்று வரிகளில் அறிமுகப் படுத்துங்கள். அதிக வர்ணனைகள். வேண்டாம். ஆரம்பம் கவர்ச்சியாக இருக்க வேண்டும். முதல் இரண்டு வரிகள் வாசித்தவுடன் பிடித்து கொண்டால் வாசகர் தொடர்ந்து வாசிப்பார். ஒரு அப்பிலை ஓரு கடி கடித்து சுவயாக இருந்தால் தொடர்ந்து உண்ணவேண்டும் போல் இருக்கும். தெளிவான நடையில் நகைச்சுவை கலந்து , ஆபாசம் இல்லாமல் எழுதப் பழகவேண்டும் நீண்ட வசனங்களை தவிர்க்கவும் பொருத்தமான பெயர்களை காதப்பாத்திரங்னகளுக்கு தெரிந்து எடுக்கவும்
கதையை எழுதி முடித்து விட்டு இரு நாட்கள் தொட வேண்டாம். அதன் பின் எடுத்து வாசித்தால் மனதில் பல திருத்தங்கள் தோன்றும். கதை நம்பக் கூடியதாக இருக்க வேண்டும் உருவக., அறிவியல் கதைகளை தவிர்த்து. கற்பனைக்கு எல்லை இல்லை. 1945 இல் ஆர்தர் சி கிளார்க் என்ற அறிவியல் எழுத்தாளர் செய்மதி பற்றி தன் ஒரு அறிவியல் கதையில் எழுதினார் பலர் வாசித்து விட்டு இது நடக்குமா என்று கேட்டனர் . பின் 1955 இல் ருஸ்யா ஸ்புட்னிக் செய்மதியை வானில் பிதக்க விட்டது . ஆர்தர் சி கிளார்க் திருசங்கு சுவர்க்கம் கதை பற்றி வாசித்தாரோ என்னவோ. தெரியாது எழுத்தாளரின் கற்பனைகள் பாரதி போல் உண்மையாகலாம். அதனால் எழுத்தாளன் பேரும் புகழும் வந்தால் கர்வம் வரக் கூடாது.

ஒரு காலத்தில் . பேனாவையும் பேப்பரையும் பாவித்து பல முறை எழுதியதை வெட்டி, பேப்பரை கசக்கி எறித்து எழுதியதும் உண்டு. ஆனால் தொழில் நுட்பம் முன்றிய இக்காலத்தில் word இல் google input tools பாவித்து Unicode அல்லது Bamini எழுத்ததுருவில் எழுதுவது இலகு. அதோடு பேச்சினை word இல் எழுத்து வடிவமாக்க முடியும். எழுதியதை மின்நூலாக்குவது இலகு. இதனால் பகிர்வது இலகு. செலவும் குறைவு. நூல் இடத்தை எடுக்காது. நிறை இல்லை தேவையான இடத்தில தேவையான நேரம் வாசிக்கலாம்.அதற்கு கிண்டில் (Kindle) கோபோ IKobo) போன்ற கைக்குள் அடங்கும் கருவிகள் உண்டு .
எபோதும் காதல் பற்றி எழுத வேண்டாம். அறிவியல்
படித்தால் அறவியல் கதைகள் எழுதுவது சுலபம் . அது பெரும் கடல் வராலறு தெரிதிருந்தால் மரபுக் கதைகள் எழுதலாம். அப்படி நான் எழுதிய இலங்கையின் இருபது மரபுக் கதைகள் பலர் வாசித்து ரசித்தவர்கள்.
எழுதும் போது பல் கலாச்காரக் கதைகளும் எழுதுங்கள்.
வளரட்டும் உங்கள் சிந்தனை

******

எழுதியவர் : பொன் குலேன்திரன் – கனடா (28-Nov-17, 2:57 am)
பார்வை : 290

மேலே