யேஹூடா டேவிர் என்ற காமிக்ஸ் கலைஞர், தன் மனைவி மாயாவுடனான அழகிய தருணங்களை “One of Those Days”, என்ற பெயரில் காமிக்ஸ்களாக
யேஹூடா டேவிர் என்ற காமிக்ஸ் கலைஞர், தன் மனைவி மாயாவுடனான அழகிய தருணங்களை “One of Those Days”, என்ற பெயரில் காமிக்ஸ்களாக வரைந்து வருகிறார். அந்த காமிக்ஸ்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம்.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் எனும் நகரத்தை சேர்ந்த யேஹூடாவுக்கும் மாயாவுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகளாகின்றன. தங்கள் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்ன சின்ன க்யூட் சம்பவங்களை மாயா கான்செப்டாக உருவாக்கி, யேஹூடாவிடம் கூறுவார். அதன்பின், அதனை யேஹூடா காமிக்ஸாக உருவாக்குகிறார். அதற்கான வண்ணங்கள், அமைப்பு உள்ளிட்டவற்றிலும் மாயா தனது ஐடியாக்களை அள்ளி தெளிக்கிறார்.
“மாயாவும் சிறந்த கலைஞர்தான். என்னைவிட சிறந்த கலைஞர் என நினைக்கிறேன். ஆனால், இதை சொன்னால், அவள் கோபம் கொள்வாள்”, என்கிறார் யேஹுடா.
”எங்களுக்குள் நடப்பவற்றைத்தான் நாங்கள் வரைகிறோம். கற்பனைகளை அல்ல.”
யேஹூர் மாயாவை முதன்முதலாக ராணுவத்தில்தான் சந்தித்திருக்கிறார். அதன்பின் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
“நாங்கள் ஏற்கனவே நல்ல நண்பர்களாக இருந்ததனால்தான், இப்போது நல்ல காதல் ஜோடிகளாக இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கிறோம். அவர்களுடைய, நல்ல, கெட்ட பண்புகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்”, என்று கூறுகிறார் யேஹூடா.