எங்கே போகிறாய் தமிழ்காற்றே

பழகியபாதையில் மாறாய்சில மதிவீழ்த்தும் மாற்றுக்கருத்து
வழக்கம்போல வானரச்சேட்டை வழியெங்கும் மீளாசிந்தை...

பழிசுமந்த ஒருகாளை பாறையிலமர்ந்து விசும்பிநிற்க
விழிகண்ட மறுகணமே விரைந்துபிடித்தது காவல்துறை...

இல்லத்தரசியின் கள்ளக்காதலால் இவனுக்குவினை ஏழரைச்சனி
சொல்லத்துணியா நல்லமனதிற்கு இருவாரம் பிணையக்காவல்...

சீர்வரிசை சிறப்பில்லையாம் சீமாட்டியவளை சினம்கொண்டானாம்
தார்சாலையில் தடுக்கிவிழுந்ததை தனக்குச்சாதகமாய் முன்மொழிந்தாள்...

( எங்கே போகிறாய் தமிழ்காற்றே )

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (29-Nov-17, 7:08 am)
பார்வை : 90

மேலே