பெண்ணே விழித்துக்கொள்
பிறந்தது முதலே எதிர்ப்புகள்
பிறக்கும்
வளர்ந்ததும் உலகம் அடக்கிட நினைக்கும்
உயர்வினை அடைந்தால் வெறுப்பினை உமிழும்
தாழ்வினை அடைந்தால் தாழ்த்திட முயலும்
உழைப்பவள் என்றொரு கவுரவம் கொடுக்கும்
உழைப்பினில் உயர்வதைத் தடுத்திட துடிக்கும்
கவிதையில் நீயே கனியென வாழ்த்தும்
கற்பனை ஒன்றிலே உன் புகழ்
போற்றும்
அழகினை ரசித்திடும் ஆயிரம்
கூட்டம்
அழுகை என்றதும் எடுத்திடும்
ஓட்டம்
கவனம் இழந்தால் வரும்
ஏமாற்றம்
மவுனம் கலைந்தால் இழிவாய்த்
தூற்றும்
உறவினைத் தொடர்ந்தால் உயிரெனக் கூறும்
பிரிவினை வந்தால் நிலைமையே
மாறும்
கனவு கொள்வது தவறெனச்
சீறும்
உன் உணர்வு என்பது எமனிடம்
சேறும்
பருவம் அடைந்தால் காதல்
பிறக்கும்
சமயம் அதுவே உயிரைப்
பறிக்கும்
கதிரவன் பிறந்தால் சுதந்திரம்
அளிக்கும்
பகலவன் மறைந்தால் சுதந்திரம்
மறுக்கும்
இத்தனைத் துன்பமும் வாழ்க்கையில் இருக்கும்
பெண்ணாய் பிறந்தால் உலகமே
கொடுக்கும்
உன் வலிகளை மறந்திடு தோல்விகள் மறையும்
உன் வலிமையை உணர்ந்திடு
வெற்றிகள் குவியும்.