வானம் தொட்டுவிடும் தூரம்தான்

அன்னை தந்த
பாலின் சுவை
அமிழ்தம் போல
தித்தித்தது!....
அழகு நடை தமிழ்ச்
சுவையோ அழகாய்
இங்கே கவிக் கொண்டது !....
தேனீ கூட்ட தேன்
போல தேடல் இங்கே
தொடர்கிறது !....
அரும்புகளின் கூட்டமோ
பனிக்காக ஏங்கி
கிடக்கிறது !....
"கோ" மாத பால்
தந்து தாயக காக்கிறாள் !...
சிகரத்தை தொட நினைத்து
வீழ்ந்தவர் இங்கில்லை !...
சிறுபான்மை பெருபான்மை
முயற்சியிலே கிடையாது !....
அன்புநடை அழகுநடை
வீரநடை அதுவே
வெற்றிநடை !....
வீரம் விளைத்த மண்ணிலே
பிறந்த முத்துக்கள்
நாம் !....
கண்கள் பேசும்
ஒரு கவினனுக்கு !
மொழி தேவையில்லை
ஒரு ஞானிக்கு !....
கடல் போல
மனம் உனக்கு
மலைப் போல
குணம் உனக்கு
மழைப் போல
சொல் கொண்டு
மணல் போல
கவிபாடும்
வீரனே !.....
வானம் தொட்டுவிடும்
தூரம் தான்
தொட்டு விடு!.....

எழுதியவர் : பெரியகவுண்டர் (29-Nov-17, 4:10 am)
சேர்த்தது : PERIYAGOUNDAR
பார்வை : 547

சிறந்த கவிதைகள்

மேலே