விவசாயிகளின் அழுகுரல்
இறைவனே ஏன் பிறந்தேன்
இந்த உலகினில் ஏன் பிறந்தேன்?
பிறந்தவன் ஏன் விழுந்தேன்
ஏன் உழவினில் நான் விழுந்தேன்?
உழவன் நான் ஏன் இழந்தேன்
உந்தன் தயவினை ஏன் இழந்தேன்?
உரிமைகள் இழந்துவிட்டேன்
என் விடியலைத்
தொலைத்துவிட்டேன்
எம் மனதில் மட்டும் ஈரம் நிறைவதால்
மண்ணில் சிறுதும் பயிர்கள் விளையுமா?
தண்ணீர் வேண்டி கண்ணீர்
வழிந்துமே
மவுனமே தொடர்கிறாய்...
ஏன் இறைவா?
எந்தன் அழுகுரல் உன் செவிகளில்
விழவில்லையா??
சிறு கருணையும் எங்கள் மீது
விழவில்லையே ஏன்??
மனிதமே உந்தன் மனமும்
எங்கள் வலியை உணர்வது இல்லை
ஏனோ?
இயற்கையின் பணிகள் எதுவும் சரிவர நிகழ்வதும் இல்லை ஏனோ?
மனிதனே புரிகின்றதா??
உன் தவறுகள் தெரிகின்றதா??
இயற்கையின் இறுக்கமெல்லாம்
நம் தவறினால் நிகழ்வது தான்...
சுயமாய் வாழும் உழவர்கள் நாங்கள்
சுகங்கள் இழந்து துயரத்தில்
வீழ்கிறோம்
இவ்வுலகில் சுயநலம் ஒன்றே பெருகிட காண்கிறோம்
நடைபிணமாய் அலைகிறோம்...