மஞ்சுவிரட்டு
![](https://eluthu.com/images/loading.gif)
இதுவொன்றும் போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
அம்பென பாயும் கொம்புகள்
இதுவொன்றும் போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
வீரமரணம்
இதுவொன்றும் போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
விழுப்புண்கள்
இதுவொன்றும் போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
யுத்தமும்
இரத்தமும்
இதுவொன்றும்
போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
வெற்றியும்
தோல்வியும்
இதுவொன்றும்
போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
பரிசும் பாராட்டும்
இதுவொன்றும்
போர்க்களமல்ல
ஆனாலும் இங்குண்டு
தமிழனின் வீரமும்
ஈரமும்